21 நாடுகளில் 12–17 வயதுக்குட்பட்ட சுமார் 2 கோடி குழந்தைகள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.
இதில் 1.5 கோடிக்கும் அதிகமானோர் விரும்பத்தகாத பாலியல் உள்ளடக்கங்களையும், 90 இலட்சம் பேர் கட்டாய பாலியல் உரையாடல் அல்லது படப் பகிர்வையும் எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 40 இலட்சம் குழந்தைகளின் பாலியல் படங்கள் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளன. 60% சம்பவங்கள் சமூக ஊடகங்களிலும், 14% இணையவழி விளையாட்டுகளிலும் இடம்பெற்றுள்ளன.
பல சம்பவங்கள் குறித்து குழந்தைகள் புகார் அளிக்காததால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என UNICEF எச்சரித்துள்ளது.







