2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தை மட்/புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் பெற்றுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் நான்காவது இடத்தையும் அகர்வின் பெற்றுள்ளார்.
இம்முறை புனித மிக்கேல் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 62 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.
அகர்வினுக்கு ஆசிரியர் S. கங்காதரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வழங்கிய வழிகாட்டலும், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஆதரவும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.







