வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் மற்றும் புதிதாக அறிமுகமாகவுள்ள பயங்கரவாத
எதிர்ப்பு சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களை உள்ளடக்கிய தாக இந்த போராட்டத்தை நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு கூட்டம் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் வேறுபாடுகள் களைந்து இணையுமாறு ரெலோ பேச்சாளர் கு. சுரேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்
பட்டுவரும் தொல்லியல் சான்றுகள் அழிப்பு, பௌத்த சின்னங்கள் நிறுவல், குடியேற்றங்கள் உருவாக்கல்
என்பவற்றுக்கு எதிராக மக்களை போராடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், புதிய பயங்கவராத எதிர்ப்பு சட்டம் கருத்து சுதந்திரத்தை மறுக்கிறது. இதனை நிராகரிக்கிறோம் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பேச்சாளர் கு. சுரேந்திரன் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
சிங்கள பேரினவாத சக்திகளால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தொல்லியல் சான்றுகளை அழிப்பதோடு, பௌத்த சின்னங்களை நிறுவி குடியேற்றங்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு கடும் எதிர்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
அண்மையில், வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக
விஷமிகளால் சேதமாக்கப்பட் டுள்ளது. இதேபோன்று கீரிமலையில் அமைந்துள்ள சிவனாலயம் சித்தர் மடங்கள் என்பன நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, கச்சதீவு மற்றும் நிலாவரையில் புத்தர்சிலை, குருந்தூர்மலையில் பௌத்த ஆலய கட்டடம், கன்னியா வெந்நீரூற்று தொல்லியல்
திணைக்களத்தால் கைப்பற்றல் என்று தொடரும் நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிப்பதோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறோம்.
இதேபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐ. நா. மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாகக் கூறிக்கொண்டு
அதைவிடக் கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முகமாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்ட மூலத்தை நாங்கள் முற்றுமுழு தாக நிராகரிக்கிறோம். இதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம்.
ஏற்கனவே இருந்த சட்ட மூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துகளுக்கும் மேலதிகமாக அவசரகால சேவைகளாக கரு தப்படும் உணவு உற்பத்தி, விநி யோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையும் போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது.
அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும்
அமைப்புகளைச் சார்ந்தவர்க ளும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாய கரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.இது அடிப்படை மனித உரி
மைகள் மீறலை முற்றுமுழுதாக மீறுவதோடு தனிமனித பேச்சு சுதந்திரத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையாக நாம் நோக்குகிறோம். இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாம்
சுவாசிப்பதற்கும் உணவு உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாதவர்களாக
சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவோம்.
எமது உரிமை சார்ந்த விடயங்களைப் பற்றி குரல் எழுப்பவோ அடக்குமுறைகள்
ஆக்கிரமிப்புகளைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாதவர்களாக ஆக்கப்படுவோம்.இவற்றை எதிர்த்து எமது கண்டனங்களை பதிவு செய்வதோடு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரட்டி இவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அழைக்கிறோம். கட்சி பேதங்கள், அரசியல் கோட்பாடுகள், சின்னங்கள் என்பவற்றைத்தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழில்சங்கங்கள், மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும் எம்மோடு கைகோத்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அறை கூவல் விடுக்கிறோம் – என்றுள்ளது.