Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போராடும் உரிமையை பறிக்கும் பொலிஸார்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் குற்றச்சாட்டு!

போராடும் உரிமையை பறிக்கும் பொலிஸார்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நீண்டகாலமாக பேசுபொருளாகயிருக்கும் மயிலத்தமடு,மாதவனை பிரச்சினைக்கு வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாக அமைதியான முறையிலேயே போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் தங்களால் போக்குவரத்திற்கோ பொதுச்சேவைகளுக்கோ எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாத நிலையில் எங்களை கைதுசெய்ததானது இலங்கை பொலிஸாரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நேற்றுமுன்தினம் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்த பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இதன்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள,யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சிந்துஜன் கருத்து தெரிவிக்கையில், மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு குரல்கொடுக்கும் வகையில் வடகிழக்கு பல்கலைக்கழக சமூகமாக இணைந்து நாங்கள் பண்ணையாளர்களின் நிலங்களை அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.இதன்போது பொது போக்குவரத்துக்கு ஏதும் தடைகள் ஏற்படாமலும் எங்களது உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் எனத் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
Next Post
மட்டு மயிலத்தமடு மேய்ச்சல் தரைப்பகுதியில் அமைக்கப்பட்டது பொலிஸ் சோதனை சாவடி!

மட்டு மயிலத்தமடு மேய்ச்சல் தரைப்பகுதியில் அமைக்கப்பட்டது பொலிஸ் சோதனை சாவடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு