Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு உணவகமொன்றில் விற்கப்பட்ட பழச்சாறு; அதிகளவில் சேர்க்கப்பட்ட அமிலம்!

மட்டு உணவகமொன்றில் விற்கப்பட்ட பழச்சாறு; அதிகளவில் சேர்க்கப்பட்ட அமிலம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்டு வந்த பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதாத்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர் மற்றும் விற்பனை முகவர் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (23.11.2023) இந்த உத்தரவினை விதித்துள்ளார்.

அரசடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டு வந்த மிக்ஸ்புரூட், மாம்பழம் வகைகளை கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை வாங்கி குடித்த பொதுமக்கள் பலர் குறித்த பழச்சாற்றின் சுவையில் அதிகளவு கச்சல் தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

குறித்த உணவகத்தை கடந்த அக்டோபர் மாதம் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் றியல் பிளஸ் நாமம் பொறித்த 200 மில்லி லீற்றர் பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அந்த கடை உரிமையாளர், விற்பனை முகவர், உற்பத்தி கம்பனி உரிமையாளர் உட்பட 3 பேருக்கு எதிராக மட்டு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததுடன் கைப்பற்றப்பட்ட பழச்சாறு போத்தல்களின் மாதிரிகளை கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து மிக்ஸ்புரூட், மாம்பழம், பழச்சாற்றுக்களை இரசாயன பகுப்பாய்வினர் பரிசோதித்தன் பிரகாரம் அதில் பென்சோயிக் அமிலம், சல்ஃபர்டை, ஆக்சைடாக சல்பைட், பென்சோயிக் அமிலம் ஆகிய கலவைககளின் உள்ளடக்கம் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உகந்தது அல்ல என இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்று(23) நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்கின் 2ஆம் 3ஆம் எதிரிகளான கம்பனி முகவர் கம்பனி உரிமையாளர் இருவருக்கும் தலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் குறித்த பெயர் கொண்ட பழச்சாற்று போத்தல்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து உடனடியாக கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
Next Post
மட்டக்களப்பில் பாம்பு தீண்டி குழந்தை மரணம்!

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி குழந்தை மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு