2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்ட காலப்பகுதியில் சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரை கைது செய்து தடுத்து வைத்த சம்பவத்தில், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரால் குறித்த உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அநுருத்த பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னர், உயர் நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
குறித்த கைது மற்றும் தடுத்து வைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தீர்மானித்துள்ளது.








