Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பேராசிரியர்களுக்கு கௌரவிப்பு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பேராசிரியர்களுக்கு கௌரவிப்பு!

3 years ago
in செய்திகள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்களான எஸ்.எம்.எம். மஸாஹிர், ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் பீடத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை கடமையாற்றிய பீடாதிபதிகளின் படங்களை ஞாபகார்த்த நிமிர்த்தம் காட்சிப்படுத்தும் நிகழ்வும் பீடாதிபதி, எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் 2023.11.30 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்திலும் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டதுடன் வரவேற்புரையை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம். நைறூஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

பீடாதிபதி, எம்.எச்.ஏ.முனாஸ் தனது தலைமையுரையில் கௌரவிக்கப்பட்ட பேராசிரியர்களை வாழ்த்தியதுடன் பல்கலைக்கழகத்துக்கும் பீடத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிக்காக நன்றியும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றியபோது தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களை எடுத்துக் கூறியதுடன் அவைகளுக்கு தீர்வுக்கான புத்திஜீவிகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், பேராசிரியர் ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோர் தங்களது உரைகளின் போது இவ்வாறான அடைவுகளை தாங்கள் பெற்றுக்கொள்ள உதவிய அத்தனைபேருக்கும் நன்றி தெரிவித்தனர்.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் தனது உரையில், கல்வியாளர்கள் தாங்கள் உயர்வு ஒன்றை பெற்றவுடன் அனைத்தும் முடிந்து விட்டது என்று விட்டுவிடாது அவர்களது ஆராய்ச்சி பணிகளை இன்னும் உத்வேகத்துடன் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் மாணவரிடேயே உடை அணியும் விடயத்தில் நல்லதொரு முன்மாதிரி ஏற்பட்டுள்ளதைக் கண்டு பூரிப்படைவதாகவும் தெரிவித்தார்.

நன்றியுரையை உதவிப்பதிவாளர் எஸ். பிரசாந்த் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யு.எல். அப்துல் மஜீத், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி.எச்., சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், நூலகர் எம்.எம். ரிபாய்தீன், பல்கலைக்கழக ஊடக பிரிவின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.ஷிப்லி, பீடத்தின் ஏனைய முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பீடத்துக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி
செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

July 29, 2026
கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
Next Post
இலாபகரமாக இல்லாவிட்டால் CTB தனியார் மயமாக்கப்படும்; அமைச்சர் பந்துல!

இலாபகரமாக இல்லாவிட்டால் CTB தனியார் மயமாக்கப்படும்; அமைச்சர் பந்துல!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.