Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரம்ப பிரிவு மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த பாடசாலை ஊழியர் பொலிஸாரால் கைது!

ஆரம்ப பிரிவு மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த பாடசாலை ஊழியர் பொலிஸாரால் கைது!

3 years ago
in செய்திகள்

வென்னப்புவ பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவருக்கும் தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அம்மாணவர்களின் உடல்களை தொட்டு பாலியல் சில்மிசம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமைபுரியும் சிற்றூழியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் தலைமையக குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழுவினர் குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் நடத்தை பற்றி அந்த மூன்று மாணவிகளும், மாணவனும் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இதுபற்றி பாடசாலையின் அதிபர் வென்னப்புவ தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் பாலியல் சில்மிசம் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் மூன்று மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவர்களுக்கு ஆபாச காட்சிகளை காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரின் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலின ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
ஞாயிறு ஆராதனைக்கு தேவாலயத்திற்கு வராத சிறுமியை தாக்கிய பங்குத்தந்தை!

ஞாயிறு ஆராதனைக்கு தேவாலயத்திற்கு வராத சிறுமியை தாக்கிய பங்குத்தந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு