Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொடரும் காட்டுயானை தொல்லை; மட்டு இலுப்படிச்சேனை பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

தொடரும் காட்டுயானை தொல்லை; மட்டு இலுப்படிச்சேனை பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது. இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் – காட்டு யானை தொல்லைக்கு தீர்வு கோரி இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியை வழிமறித்து சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் பதாதையை ஏந்தியவாறு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி கோஷங்களை எழுப்பி – சுமார் 50 பேரளவில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின் வேப்பவெட்டுவான் இலுப்படிச்சேனை சந்தியை வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்படிச்சேனை பிரதான வீதியால் பேரணியாக சென்றகொண்டிருந்தவேளை அவ்வழியால் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திடீரென வருகை தந்ததை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர். தமக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறும் காட்டு யானை தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். வேறு வேலையாக அவசரமாக செல்கிறோம் – வரும் போது உங்களை சந்திக்கிறோம் எனத்தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்கள வாகனம் சென்றுவிட்டது. இதன்பின் இலுப்படிச்சேனை – வனஇலாகா அலுவலகம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். வனஇலாகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்படிச்சேனை வன இலாகாவுக்கு சொந்தமான பகுதியான அரச காணியான தேக்கஞ்சோலை பகுதியினுள் காட்டு யானைகள் நிற்பதாகவும் -அக்காட்டினுள் உள்ள யானையை அங்கிருந்து விரட்டும் படியும், தேக்கஞ்சோலை சோலை காட்டுப்பகுதியை துப்பரவு செய்யக்கோரியுமே வனஇலாகா அலுவலகம் முன் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

“அதிகாரியே வெளியேறு வெளியேறு.. எமக்கான தீர்வை பெற்றுத் தா பெற்றுத் தா.. என கோஷமிட்டு அதிகாரிகள் தமது பிரச்சினை தொடர்பில் பதில் கூற வேண்டும் என சுமார் ஒரு மணி நேரம் வாயின் கதவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் வெளியே வரவில்லை. இதன் போது அங்கு வருகை தந்த கரடியனாறு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை வனஇலாகா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாட போலீசார் உள்ளே அழைத்துச் சென்றனர். அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவது தொடர்பாக – போலீசாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த தாய்!

மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த தாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.