Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதையலா? பூசாரியின் மனைவியுடன் தொடர்பா? – மட்டு வாகரையில் ஒருவர் உயிரிழப்பு!

புதையலா? பூசாரியின் மனைவியுடன் தொடர்பா? – மட்டு வாகரையில் ஒருவர் உயிரிழப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில் கூரிய ஆயுதமொன்றின் தாக்குதலுக்குட்பட்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் இன்று (8) மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மட்டக்களப்பு புணாணையில் வசித்து வந்த எஸ்.டி.அனுர ஜெயலால் வயது (65) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தளத்தில் வசித்து வந்தவர் தமது குடும்பத்தின் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த பல வருடங்களாக புணானைப் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதியன்று கீழிக்குடா மாங்கேணியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் உயிரிழந்தவரும்,அவரது சகோதரியும் கண்டியைச் சேர்ந்த பூசாரிகளுடன் தங்கி இருந்து புதையல் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தனர். இதேவேனை நேற்று வியாழக்கிழமை (7) காலை உயிரிழந்தவரின் சகோதரியான எஸ்.டி.சுமித்திரா ஜராங்கனி என்பவர் வெட்டுக் காயங்களுடன் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பூசாரிகள் காணியின் காவலாளர் என்போர் தலைமறைவாகியுள்ளனர்.புதையல் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு தொடர்பாக இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதன்போது காணிக்குள் இருந்த வீட்டின் அருகாமையில் மடு வெட்டியமைக்கான தடயங்கள் மற்றும் புதையல் எடுப்பதற்கான பூசைப் வழிபாட்டு பொருட்கள் என்பன காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வாகரை பொலிசார் விரைந்து முன்னெடுத்துள்ளனர்.சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை பூசாரியின் மனைவியுடன் உயிரிழந்தவர் தகாத உறவில் இருந்தமையால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
ரிஷாத் பதியுதீன் நாட்டுக்குள் பாரியளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தினார் – அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு!

ரிஷாத் பதியுதீன் நாட்டுக்குள் பாரியளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தினார் - அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.