மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு
நிலவுவதால் குருதிக் கொடையாளிகள் விரைந்து இரத்ததானம் செய்யுமாறு வைத்தியாலை
இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லா வகையான இரத்தத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர்காக்கும் உன்னத சேவையை மேற்கொள்ள குருதிக் கொடை யாளர்களின் மகத்தான கொடை தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக வந்து உதவவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.