துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதி உதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையானது அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத் தேவையான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை வைபவரீதியாக பெற்றுக்கொண்டது.
இந்தக் கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழில்நுட்ப பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆர். கே. றிபாய் காரியப்பர், சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் துறை தலைவருமான கே.எம். றிப்தி உட்பட பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் TIKA இன் பிரதிநிதிகளான செவ்கி மெர்ட் பாரிஸ், ஜெய்னெப் பைராக் மற்றும் ஓயா துதுன்சு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.