Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாள்தோறும் காணாமல் போகும் 10 குழந்தைகள்; பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய தேசிய குற்ற பதிவு காப்பகத்தின் அறிக்கை!

நாள்தோறும் காணாமல் போகும் 10 குழந்தைகள்; பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய தேசிய குற்ற பதிவு காப்பகத்தின் அறிக்கை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்திய தேசிய குற்ற பதிவு காப்பகத்தின் 2022-க்கான அறிக்கை கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிக்கை, பல்வேறு சமூக பிரச்னைகளின் தீவிரத்தைத் தெரிவிப்பதாக இருந்து வருகிறது. இந்திய அரசு நிர்வாகத்தின் திட்டமிடலுக்கு இந்த குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

மகளிர், குழந்தைகள், முதியோர், பல்லினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதை 2022-ஆம் ஆண்டுக்கான காப்பக அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையானது தேசிய அளவில் நடக்கும் குற்றங்களின் துல்லியமான கணக்கெடுப்பு இல்லை என்றும் ஆவணக் காப்பகம் கூறுகிறது. பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் புள்ளிவிவரங்களை தவிர, மற்ற நிகழ்வுகள் கணக்கெடுக்கப்படுவதில்லை என்பதையும் அறிக்கை முதலிலேயே தெரிவிக்கிறது.

அதன் அடிப்படையில் தற்போது பதியப்பட்டிருக்கும் குற்றங்கள் தொடர்பான அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கை தெரிவிப்பதாவது,

தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 3,443 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இதுவரை காணாமல் போன குழந்தைகளில் 4,097 பேர் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 10 குழந்தைகள் காணாமல் போவதாகவும், ஒவ்வொரு 10 ஆயிரம் குடும்பத்தில் ஒரு குழந்தை காணாமல் போவதாகவும், கடந்த 2020-2022ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் காணாமல்போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதும், உடனடியாக, குழந்தையின் புகைப்படத்தோடு, அவரின் அனைத்து தகவலோடும், அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்படும். அனைத்து வகைகளிலும் தேடுதல் பணி நடைபெறும். நான்கு மாதங்களில் காணாமல் போனவர் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது மனித கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்துவது நடைமுறையாக இருப்பதாக, அந்த மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
Next Post
விஜயை கடுமையாக விமர்சித்த பிரபலம்!

விஜயை கடுமையாக விமர்சித்த பிரபலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.