ஆப்பிரிக்க நாடான லிபியா கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட பேரலையால் குறித்த படகு விபத்தில் சிக்கியதாக சம்பவத்தில் உயிர் தப்பியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிர் தப்பிய 25 பேர்கள் மீட்கப்பட்டு லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பலரும் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்றே தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் நுழைய திட்டமிடும் மக்கள் பலர் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க லிபியாவை தெரிவு செய்கின்றனர்.
இந்த ஆண்டில் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்ற 2,200க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.