Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் நாட்டில் வெள்ளத்துக்கு மத்தியில் பயணிகளுடன் சிக்கிக்கொண்ட ரயில்; மீட்பு பணிகள் தீவிரம்!

தமிழ் நாட்டில் வெள்ளத்துக்கு மத்தியில் பயணிகளுடன் சிக்கிக்கொண்ட ரயில்; மீட்பு பணிகள் தீவிரம்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழ் நாடு தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் மூன்றாவது நாளாக சிக்கி தவிக்கின்றனர். நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்தது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது. காலை 6 மணி முதல் ஹெலிகாப்டர் இறங்க முடியாமல் ரயில் நிலையம் பகுதியில் சுற்றி வருவதாகவும், ரயில் நிலையம் பகுதியில் உணவு பொட்டலங்களை வழங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடும் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் இந்த நிலைமை தொடர்பில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சாப்பாடு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் மீட்கப்பட்டு அவர்கள் மதுரையில் பாதுகாப்பாக உள்ளனர்.

போதுமான அளவுக்கு உணவு பொருட்கள் மற்றும் குடிநீரும் மதுரை விமான நிலையம் , பரத்தூர் நேவி ஏர்வேஸ் பகுதியிலிருந்து செயல்படுகிறது. தேசிய மீட்பு குழுவினர் மூலம் மக்களை இரவு முதல் பாதுகாப்பாக மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 133 மொபைல் மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 279 படகுகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 10,082 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 672 ஜே சி பி, பொக்லைன் போன்ற வாகனங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியாக பிரிந்து தேவையான பொருட்களை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தெருக்களுக்கும் உணவுகளை எடுத்து செல்வது சவாலாக உள்ளது. சேலம், திருப்பூர் பகுதிகளிலிருந்து பால் கொண்டு வந்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 79 பேருந்துகள் தான் தூத்துக்குடியில் செயல்பாட்டில் உள்ளது.

மழைநீர் வடிந்த பின் தான் போக்குவரத்து சீராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 15,626 தொலைத் தொடர்பு கோபுரங்கள் உள்ளன, 1200க்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பயணிகள் ரயிலில் சிக்கியவுடன் அவர்களுக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் மூலமாக உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு, பிரெட், பிஸ்கட், ஜாம், குடிநீர், பால் பவுடர் போன்றவை ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

300 பேர் ரயில் நிலையத்தில் உள்ளனர். அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் 200 பேர் உள்ளனர். காவல்துறை மூலமாக பள்ளி வளாகத்தில் உள்ளவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 6 அமைச்சர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை மாநகராட்சி பகுதிகளில் ஓரளவிற்கு தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. இன்று மதிப்பிற்கு மேல் நீர் வடிய வாய்ப்புள்ளது. அதிகப்படியான பகுதிகளில் படகு மூலமாக சென்று சேர முடியவில்லை. அதிக நீர் தேங்கியுள்ளது.

மத்திய அரசு மூலம் என்னென்ன உதவிகள் தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து நேற்று இரவு முறையையே 10,000 மற்றும் 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ஆடை தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியில்
செய்திகள்

ஆடை தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியில்

May 21, 2025
புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது
செய்திகள்

புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

May 21, 2025
வத்தளை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு
செய்திகள்

வத்தளை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

May 21, 2025
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

May 21, 2025
மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

May 21, 2025
கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
செய்திகள்

கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

May 21, 2025
Next Post
கிரான் கிராமத்தின் வரலாற்றில் முதற் சட்டத் தரணியாக குமாரவேல் புருஷோத்தமன் பதவிப் பிரமாணம்!

கிரான் கிராமத்தின் வரலாற்றில் முதற் சட்டத் தரணியாக குமாரவேல் புருஷோத்தமன் பதவிப் பிரமாணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.