Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்;பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்!

மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்;பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்துசபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துசபை டிப்போக்களில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் மாலை கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின் சாரதி ஒருவர் தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர்களினால் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இன்றைய தினமும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் களுவாஞ்சிகுடி,வாழைச்சேனை,ஏறாவூர் ஆகிய டிப்போ ஊழியர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதன் காரணமாகவே தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடருவதாகவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் தாங்கள் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பின் இலங்கை போக்குவரத்துசபை பஸ்களின் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பாடசாலைசெல்லும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல்!

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மியன்மார் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 56 இலங்கையர்கள்; பேச்சு வார்த்தைகள் தீவிரம்!

மியன்மார் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 56 இலங்கையர்கள்; பேச்சு வார்த்தைகள் தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு