Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்லவிருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்லவிருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

3 years ago
in செய்திகள்

சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், நல்லதண்ணியிலிருந்து சிவனொளிபாத மலை உச்சி வரையிலான அனைத்து ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் விற்பனை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட செயலகம், அம்பகமுவ பிரதேச செயலகம், மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவு மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள், நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாலும், பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் பக்தர்களால் கொண்டு வரப்படும் கழிவுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் (09.11.2023) சப்ரகமுவ மாகாண பிரதம சங்கநாயக பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் நல்லதண்ணி கிராம சேவகர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சிவனொளிபாத மலை பூமியின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் முறையான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிவனொளிபாத மலை கழிவு முகாமைத்துவத்திற்காக நுவரெலியா மாவட்ட செயலகம் 2 மில்லியன் ரூபாவை ஆண்டுதோறும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு வழங்குகிறது.

கடந்த மாதத்தில் (19.07.2023) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் (இணைப்பு 1) “சிவனொளிபாத மலை பூமிக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி, நல்லதண்ணியிலிருந்து சிவனொளிபாத மலை உச்சி வரையிலான அனைத்து ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் விற்பனை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை மட்டுமே கொண்டு வர முடியும் மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், பொலித்தீன் போன்றவற்றை எடுத்துக் செல்லாதிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும் விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சாலை தடுப்புகளிலும் முழு சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டு சிவனொளிபாத மலை பருவகாலம் தொடங்குவதற்கு சுமார் ஒரு வாரம் உள்ளதால், பக்தர்கள் தங்கள் தேவைக்கான பொருட்களை பொலித்தீன் பிளாஸ்டிக் இல்லாமல் முன் தயாரிப்பின் போது கொண்டு வர தயாராக இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 4, 2026
நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 3, 2026
சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
Next Post
இலங்கையில் ராணி எலிசபெத்திற்கு சிலை வைக்க ஏற்பாடு!

இலங்கையில் ராணி எலிசபெத்திற்கு சிலை வைக்க ஏற்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.