உலகத் தமிழர் பேரவையின் ‘இமயமலை பிரகடனம்’வரவேற்கத்தக்கதெனினும், இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக அரசியலமைப்புத்தீர்வே அமையவேண்டும் என்பதை உலகத்தமிழர் பேரவையினர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அமைதிக்கான மதங்களின் இலங்கை பேரவையின் ஏற்பாட்டில் ‘அதிகரித்த பரப்புரை
சமூக ஈடுபாடு மற்றும் சிறுவர் கள், குடும்பங்கள், சமூகங்களுக்கான நேர்மறையான நடத்தை
விளைவுகள் குறித்து கற்றல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்’ கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரையாற்று கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.