Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படை அதிகாரிகளை தாக்கிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்படை அதிகாரிகளை தாக்கிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

3 years ago
in செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களும் கடற்படையினரை தாக்கிய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 09 ஆம் திகதி 2 படகுகளுடன் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த படகின் உரிமையாளர் உள்ளிட்ட 13 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளினால் நேற்று (22) பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தை மீனவர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத் தண்டனை என்னும் நிபந்தனையுடன் விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

எனினும், கைது நடவடிக்கையின் போது மீனவர்களால் தாக்கப்பட்டு இலங்கை கடற்படையினர் மூவர் காயமடைந்தமை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவுபெறாமையினால் விளக்கமறியலை நீடிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த 13 மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கட்டளை பிறப்பித்தார்.

ஏனைய 12 மீனவர்களுக்கெதிராக நீரியல்வள திணைக்கள அதிகாரிகளால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

படகின் உரிமையாளரையும் குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இணைத்து சந்தேகநபருக்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரினூடாக அழைப்பாணை அனுப்புமாறு நீரியல்வளத்துறை திணைக்களத்தினரால் மன்றில் கோரிக்கைவிடப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அழைப்பாணை அனுப்புவது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
போதைப்பொருளுடன் மருத்துவ பீட மாணவன் கைது!

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.