உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சியானது மட்டக்களப்பு சீலாமுனை young star மைதானத்தில் இன்று (10.04.2023) காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சந்தைப்படுத்தற் விரிவாக்கற் பிரிவு மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரும் இணைந்து இந்நிகழ்வு ஒழுங்கமைத்துள்ளனர்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் ஜீ.தேவகாந்தன் கிருஷ்ணவேணி மற்றும் சமூர்த்தி தலைமை முகாமையாளர் கணபதிப்பிள்ளை பரமசிவம் மற்றும் மண்முனை வடக்கு சமுர்த்தி முகாமை பணிப்பாளர் வேதநாயகம் பரஞ்சோதி ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.