ஜோர்தானின் சஹப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்ற சுமார் 350 இலங்கையர்கள் ஒரு வருட காலமாக சம்பளம் இன்றி அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிற்சாலை நிர்வாகம் கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் உணவு மற்றும் தங்குமிட வசதியின்றி தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அங்குள்ள இலங்கையர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தங்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.