இவ்வருடம் செப்டம்பர் மாதம் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காரைதீவு – 08 மற்றும் மாவடிப்பள்ளி – மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பகுதியளவில் வீடு பாதிக்கப்பட்ட இரு பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவான 20,000/- பெறுமதியான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.