தம்புள்ளை நகரில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப் பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1300
முதல் 1500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் 100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு பச்சை மிள காயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறினர்.