Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் சுற்றிவளைப்பால் மக்கள் பாதிப்படைந்தால் நீதிமன்றை நாடலாம்!

பொலிஸாரின் சுற்றிவளைப்பால் மக்கள் பாதிப்படைந்தால் நீதிமன்றை நாடலாம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் என்பன பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றால் பொதுமக்கள் எவரேனும் பாதிப்படைந்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அண்மையில் நீதியமைச்சினால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினாலும், அதன்விளைவாக ஏற்பட்ட வன்முறைகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட போது, நாட்டைப் பொறுப்பேற்று சீரான பாதையில் வழி டத்திச்செல்வதற்கு எவரும் முன்வரவில்லை.இருப்பினும் நாம் அரசாங்கத்தைப் பொறுப் பேற்றுக்கொண்டதுடன், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சரவையை ஸ்தாபித்து பாரியசவால்களை சிறந்த முறையில் வெற்றிகண்டோம். அதனுடாக பொருளா தாரத்தை மீண்டும் ஸ்திரநிலைக்குக் கொண்டு வந்தோம்.

அடுத்ததாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லா தொழிப்பதை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்புக்கள் ஒன்றும் புதிதல்ல.போதைப்பொருள வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்தே அண்மையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டோம். போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகளால் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம். மாறாக எந்தவொரு தவறையும் செய்யாவிடின், பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கலாம்.

ஒட்டுமொத்த நாட்டையும் பீடித்துள்ள போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

July 3, 2026
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!
செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

July 3, 2026
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

July 3, 2026
Next Post
மட்டு ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மட்டு ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.