Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15 மாடுகள் கொலை; கால்நடை பண்ணையாளர்கள் கவலை!

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15 மாடுகள் கொலை; கால்நடை பண்ணையாளர்கள் கவலை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமான மாடுகள் காணாமல்போயுள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பு தெரிவித்துள்ளது.

மயிலத்தமடு,மாதவனைபகுதியில்சட்டவிரோதபயிர்ச்செய்கையாளர்களினல் தற்போதுகால்நடைகள்மீதுதாக்குதல்கள்முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அழியும் பண்ணையாளர்களின் பொருளாதாரம்கடந்த 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சுட்டும்,சுருக்கிட்டும் 15க்கும் அதிகமான மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமானமாடுகள்காணாமல்போயுள்ளதாகமயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேய்ச்சல் தரை காணிகளை பிடித்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக தினமும் பசுக்கன்றுகள் உணவு இல்லாமல் சாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதற்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையும் நிலைமையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகள் காரணமாக கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரம் அழிந்துசெல்லும் நிலைமை காணப்படுவதாகவும் இதன்காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுவருவதாகவும் நிமலன் தெரிவித்துள்ளார்.

கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும் 105நாட்களையும் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரையில் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதிகளை கணக்கிடமுடியாத நிலையுள்ளதாகவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரண் முற்றுமுழுதாக அத்துமீறிய செய்கையாளர்களுக்கு உறுதுணையாகவுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்பினைக்கூட நடைமுறைப்படுத்தமுடியாத வகையில் அங்குள்ள பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

August 18, 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!
செய்திகள்

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026
Next Post
மதுபானம் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; கலால் திணைக்களம் எச்சரிக்கை!

மதுபானம் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; கலால் திணைக்களம் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு