ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ச தனது குடியுரிமையை நீக்கிவிட்டு இலங்கை திரும்புவார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பொதுஜன பெரமுன கட்சியின் எந்தவொரு உறுப்பினரின் செய்திகளுக்கும் 10 நாட்களுக்கு மேலாக பசில் ராஜபக்ஸ பதிலளிக்கவில்லை என தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா தன்னை முன்னிறுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான பணிகளை அவர்கள் ஏற்கனவே செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையினால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை உறுதிப்பாடான அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.