அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் விசேட பிரிவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சிறப்பு பிரிவுகளுக்கு கிராம மட்டத்தில் அதிகாரி ஒருவரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.