கல்முனையில் இளம் பிக்குகள் மூவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில், கல்முனை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உரிய ஆலோசனை கிடைப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் 09 கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, மறுவிசாரணைக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.