லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் கோருவதற்காக அந்நிறுவன அதிகாரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (16) காலை 10 மணிக்கு அதிகாரசபையில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 6,740 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 2,720 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை விலை, கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







