மதங்களுக்கு அவமரியாதை தரும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட மத தலைவர் ஒருவர் கொழும்பில் நடத்திய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிறைச்சாலை அதிகாரியிடம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறைச்சாலை அதிகாரி இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் நீதி அமைச்சருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அவர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனியவிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறைச்சாலை அதிகாரியிடம் துஷார உபுல்தெனிய விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.