மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட மட்/மமே / கரவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தில் இன்று (12.04.2023) வரலாற்றில் முதல் தடவையாக விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.
2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது 21 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு அதிபர், ஆசிரியர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் என மூவர் சேவையாற்றுகின்றனர். இவ்விளையாட்டு போட்டியானது அதிபர் திரு.T.தயாகரன் தலைமையில் பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய விளையாட்டு போட்டியில் 80m தடை தாண்டல், கொடி சேகரித்தல், பந்து சேகரித்தல், உடற்பயிற்சி நிகழ்வு போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. பாடசாலை ஆரம்பித்ததிலிருந்து முதல்தடவையாக நடைபெற்ற விளையாட்டுப்போட்டி இதுவே என்பதனால் அங்கிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் பங்குபற்றியதை காணக்கூடியதாக இருந்தது.