கிழக்கு மாகாணத்திற்கான சுற்றுலா துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் urban development council இன் ஏற்பாட்டில் இன்றையதினம் (11.01.2024) மட்டக்களப்பு அமாயா விடுதியில் நடைபெறுகின்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள சுற்றுலா துறையின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் அரச மற்றும் தனியார் துறை பிரமுகர்கள் மற்றும் பங்குதாரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அபிவிருத்தி குழுவினுடைய முக்கிய தரப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றதுடன் நாளையதினம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.