சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியர் பி.ஏ. ரத்னபால என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, ஞானசார தேரரை சாதாரண உடை அல்லது சிறைச்சாலை உடையில் கைவிலங்கிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காண்பிப்பதைத் தடுத்து உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
மேலும், சிறைச்சாலை விதிகளின் 156(2) ஆம் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி, ஞானசார தேரரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்தல், அவற்றைப் பகிரங்கமாக வெளியிடுதல் அல்லது அவ்வாறு வெளியிடுவதற்கு அனுமதி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







