Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

26 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனுராதபுரம் புனித நகரில் அமைந்துள்ள ருவான்வெலி மகா சேயா மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகியவற்றை உள்ளடக்கிய புனிதப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று (09) மூன்றாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாலங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் குழுவினர் கடந்த 07ஆம் திகதி காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ருவான்வெலி மகா சேயாவுக்கு அருகிலுள்ள தானம் வழங்கும் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிகக் குடிசையொன்றை அமைக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பரிசீலித்த அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை குறித்த புனிதப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.

எனினும், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (08) இரவு போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!
செய்திகள்

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

November 9, 2026
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!
செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!

November 9, 2026
செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!

November 9, 2026
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் பெரஹெரா
காணொளிகள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் பெரஹெரா

November 9, 2026
குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

November 9, 2026
பௌத்த தேரர்கள் விவகாரம், நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் கோரும் சஜித் பிரேமதாச!
செய்திகள்

பௌத்த தேரர்கள் விவகாரம், நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் கோரும் சஜித் பிரேமதாச!

November 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு