Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் (Al-Ayyat) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற இரு பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 125 பேர் காயமடைந்துள்ளனர்.

கிசாவிலிருந்து ஃபயூம் நோக்கிப் பயணித்த ரயில், கெய்ரோவிலிருந்து அஸ்வான் நோக்கிச் சென்ற மற்றொரு ரயிலின் பின்பகுதியில் மோதியதில் பல ரயில் பெட்டிகள் தடம்புரண்டதாக எகிப்தின் தேசிய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து 72 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், விபத்துக்கான தொழில்நுட்பக் காரணங்களைக் கண்டறிவதற்காக எகிப்தின் அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன், விபத்துக்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.

எகிப்தில் பிராந்தியத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்புகளில் ஒன்று காணப்படுகின்ற போதிலும், அங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ரயில் விபத்துகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. இதனை நவீனமயப்படுத்துவதற்காக அரசாங்கம் பெருமளவிலான நிதியை முதலீடு செய்து வருகிறது.

இதேவேளை, எகிப்தின் வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்தாகக் கருதப்படும் 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில், பயணிகள் ரயிலின் ஏழு பெட்டிகளில் தீ பரவியதில் குறைந்தது 360 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்
செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

November 9, 2026
ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!
செய்திகள்

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

November 9, 2026
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!
செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!

November 9, 2026
செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!

November 9, 2026
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் பெரஹெரா
காணொளிகள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் பெரஹெரா

November 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு