Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்ஸக்களே காரணம்; கூறுகிறார் மஹிந்த!

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்ஸக்களே காரணம்; கூறுகிறார் மஹிந்த!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில், தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தால் இந்த நாட்டில் மூவின மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்துக்கு நாம் முடிவு கட்டிய பின்னர் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், வெளிநாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்களும் சுயலாப அரசியலை நடத்துகின்றனர். இது கவலையை ஏற்படுத்தும் விடயம். அவர்கள், தமிழ் மக்கள் மீது போராட்ட சிந்தனையைத் தூண்டினாலும் அந்த மக்கள் மீண்டும் போரை விரும்பவில்லை. நிம்மதியான வாழ்க்கையே அவர்களின் விரும்பம். அதை நாம் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம்.

வடக்கு – கிழக்கில் ராஜபக்சக்களை ஆதரிக்கும் தமிழ் உறவுகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நாம் என்றும் நன்றி கூறுவோம். எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு – கிழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படாது. வழமை போன்று எமக்குரிய வாக்குகள் கிடைக்கும். மொட்டுக் கட்சியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பும் முக்கிய இடம் வகிக்கும்.” – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?
செய்திகள்

இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?

September 24, 2026
மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
Next Post
உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று! – (கட்டுரை)

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று! - (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு