Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொழில்நுட்ப வளர்ச்சியில் புரட்சி; சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி!

தொழில்நுட்ப வளர்ச்சியில் புரட்சி; சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

50 ஆண்டுகள் வரை சார்ஜ் போடாமல் பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முற்றிலும் புதிய வகை பேட்டரியை தாங்கள் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த பேட்டரியானது 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து உழைக்கும் என்றும், சராசரியாக நாம் பயன்படுத்தும் பேட்டரிகளை போல இதற்கு அடிக்கடி சார்ஜ் போடவோ அல்லது பராமரிக்கவோ தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

63 நியூக்ளியர் ஐசோடோப்களை ஒரு சிறிய தொகுதியில் வைத்து, அணுசக்தி மூலமாக ஆற்றல் உண்டாக்கும் வகையில் முதல் முறையாக இந்த பேட்டரியை உருவாக்கியுள்ளது சீனாவின் Betavolt நிறுவனம்.

இந்த அடுத்த ஜெனரேஷன் பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதால், இது முழுமையாக வெற்றியடைந்ததும் ட்ரோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் படி தயாரிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக மருத்துவ சாதனங்கள் விண்வெளி ஏ ஐ சாதனங்கள் சென்சார்கள் மைக்ரோ ரோபோக்கள் போன்ற விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரி நீண்ட காலம் எந்த இடையூறுமின்றி வேலை செய்யும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக தொழில்நுட்ப புரட்சியில் சீனா முன்னிலை வகிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது Betavolt நிறுவனம்.

இந்த பேட்டரியின் சிறப்புகள் எனப் பார்க்கும்போது 15×15×5 கன மில்லிமீட்டர் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொடர்ச்சியாக 100 மைக்ரோ வாட் மற்றும் 3V வழங்க முடியும். இருப்பினும் இதன் ஆற்றல் 2025 ஆம் ஆண்டுக்குள் 1 Watt அளவு இருக்கும்படி தயாரிப்பது அந்நிறுவனத்தின் இலக்காக உள்ளது. இவை சிறிய அளவிலேயே இருப்பதால் கூடுதல் ஆற்றலை உருவாக்க பேட்டரிகளை ஒன்றாக இணைப்பது சுலபமாகும்.

குறிப்பாக இந்த பேட்டரிகள் அவ்வளவு எளிதில் தீப்பிடிக்காது, அதிக ஆற்றலால் வெடிக்காது. சுமார் 120 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்திலும் இந்த பேட்டரி சிறப்பாக வேலை செய்யும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த பேட்டரிகள் எதிர்காலத்தில் பல சாதனங்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
யாழில் இராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா’!

யாழில் இராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா'!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.