Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மொட்டுக்கட்சியை எச்சரித்தாரா சரத் வீரசேகர?

மொட்டுக்கட்சியை எச்சரித்தாரா சரத் வீரசேகர?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒற்றையாட்சிக்கும், இராணுவத்தினருக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமாயின், தாம் கட்சியில் இருந்து வெளியேறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, 

நான் தற்போதும் பொதுஜன பெரமுனவிலேயே இருக்கின்றேன். அதனை கைவிட்டு செல்லவில்லை.

பொதுஜன பெரமுனவிலேயே எனக்கு வேட்புமனு கிடைத்தது. பொதுஜன பெரமுனவிலேயே நான் போட்டியிட்டேன். பொதுஜன பெரமுன வீழ்ந்துள்ள நிலையில், அதனை விட்டுச் செல்வது சரியான ஒன்றாக இருக்காது.

ஆகவே தான் நான் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவில் இருக்கின்றேன்.

இந்த நாட்டை பிளவுபட செய்ய முயற்சித்தால், இந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு படிப்படியாக விற்பனை செய்தால், மற்றும் இராணுவத்தினருக்கும், நாட்டின் ஒற்றையாட்சிக்கும் பொருந்தாத செயற்பாடுகளில் பொதுஜன பெரமுன ஈடுபடுமானால், நான் அதில் இருந்து விலகுவேன்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொடர்ந்தும் தாம் பொதுஜன பெரமுனவிலேயே இருப்பேன்.

பொதுஜன பெரமுன சார்பாக அதிபர் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பது தொடர்பாக கட்சியின் தலைமைத்துவமே தீர்மானிக்கும். அது தொடர்பாக தற்போது கருத்துக் கூறுவது காலத்திற்கு முந்தைய ஒன்று.

பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். நினைத்துக்கொண்டிருப்பவர்களை விட வேறு நபர்களும் தேர்தலில் போட்டியிடக் கூடும். ஒகஸ்ட் மாதம் அதிபர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்பதும் எமக்கு தெரியாது. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் வேட்பாளர்கள் தொடர்பாக தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ‘ஹெபடைடிஸ் பி” நோய்; உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 'ஹெபடைடிஸ் பி” நோய்; உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.