திருகோணமலையின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து, மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மீனவர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்,யுவதிகள் என பலரும் பங்கேற்று, தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.