Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி பொலிஸாரால் கைது!

மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி பொலிஸாரால் கைது!

3 years ago
in செய்திகள்

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொத்மலை, தவலந்தனை மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார்.

கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணும் வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மிதியகல தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு கடந்த 31ஆம் திகதி வந்துள்ளார்.

இந்த ஜோடி அவரிடம் வந்து “அம்மா எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்டு உடனடியாக பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும், குறித்த பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதுடன், பொருளாதார நிலையில் இருந்து மீள உதவுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு கையடக்கத்தொலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர்.

தைக்கப்பட்ட ஆடைகள் சிலவற்றை விற்பனை செய்துவிட்டு, சில ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மறுமுனையில் பதிலளித்த தம்பதியினர், மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூறியுள்ளனர்.

குறித்த பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு வந்ததையடுத்து அவர்களை சந்தித்து அவர்களுக்கு பயண சோர்வை களைப்பதற்காக, ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை கொடுத்துள்ளனர்.

அவ்விருவரும் அவற்றை வாங்கி பருகியுள்ளனர். அதன்பின்னர் பெண்ணும் அவரது மகனும் சுயநினைவை இழந்தனர், அவர்கள் சுயநினைவு திரும்பியபோது, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல், ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5000 ரூபாய் பணம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது மகன் வைத்திருந்த விலையுயர்ந்த அலைபேசி என்பனவும் காணாமல் போயுள்ளன.

சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும் மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, மிகவும் நுட்பமான முறையில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் .

இதன்படி, சந்தேகநபர் பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, சந்தேநபர் மூன்று மாதங்கள் சிறையிலிருந்து சில தினங்களுக்கு முன்னர், வெளிவந்துள்ளார்.

அதன் பின்னர், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், பல இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (18) ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 29 ஆம் திகதி வரையிலும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
4வது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான்!

4வது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.