Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவர்கள் முதலிடம்!

கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவர்கள் முதலிடம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்களை, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பாராட்டிக் கௌரவித்தார்.

சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி ஒன்றை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
தேசிய ரீதியில் அண்மையில் நடாத்தியிருந்தது.

இரண்டு சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியில் நாடுபூராகவும் இருந்து சுமார் 125 பாடசாலைகள்
கலந்து கொண்டன.

தரம் 6 தொடக்கம் 10 வரையிலான மாணவர்கள் குழுவாக நால்வர் கலந்து கொள்ளும் இப்போட்டியில் தரம் 9 ஐச் சேர்ந்த என்.ஊமர்சமீல், எப்.எம்.ஜெசா, ஏ.எஸ்.சீத் சராபத் ஆகியோருடன் தரம் 8 மாணவனான எம்.எப்.அம்மார் ஆகியோர் கலந்து கொண்டு தமது பாடசாலைக்கும், ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆங்கில மொழியில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததுடன்,
அம்மாணவர்களை வழிநடாத்திய தொழிநுட்ப பாட ஆசிரியர் ஜே.எம். ஹம்தூன், ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளர் எம்.ஏ.எம்.அயாஸ், பாடசாலை அதிபர் மௌஜுத் மற்றும்
பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இடைநிலைப் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகிய கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வித்தியாலயம், குளியாபிட்டிய மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி, ஹோமாகம மஹிந்த ராஜபக்ஸ கல்லூரி, மிஹிந்தள மஹா வித்தியாலயம் ஆகிய 5 பாடசாலைகளிலிருந்து ஏறாவூர் அலிகார் வித்தியாலயம் தேசிய ரீதியில் முலதாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டது.
அத்துடன் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் தங்கப்பதக்கம், பெறுமதியான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசாக 40 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.

மாவட்ட செயலக திறன் அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் கே.சிவகுமார், மாவட்ட மனிதவள அபிவிருத்தி இணைப்பாளர் டபிள்யு. மைக்கல் கொலின், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம். பாஸில், ஏ. கர்ணாகரன், உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் கே.எம்.றிழா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு