Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டமும், அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் தனது அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து இப் பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் வருகை தந்ததுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய்,அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே,மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும்,பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு என பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள்,மகளிர் அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானாவும் ஆதரவு வழங்கியிருந்தார்.

கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை இன்றைய தினம் காந்திபூங்காவில் ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகே உண்ணாவிரத போராட்டம் நடாத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை பொலிஸாரின் உத்தரவுக்கு அமைவாக அகற்றப்பட்டதுடன் பொலிஸார் தமது ஜனநாயக ரீதியான போராட்டத்தினை அடக்கமுனைவதாக கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் அனுமதிபெற்றே குறித்த மேடை அமைக்கப்பட்டதாகவும் ஆனால் இன்று காலை கொழும்பிலிருந்து வந்த உத்தரவுக்கு அமைவாக மேடையை அகற்றுமாறும் போராட்டத்தை நிறுத்துமாறும் கூறப்பட்டதாகவும் ஆனால் மேடை அகற்றப்பட்டாலும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும், கொண்டுவரப்படும் புதிய சட்ட வரைவுகள் மூலம் ஒரு மனிதனின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது
செய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

June 23, 2026
Next Post
மரக்கறிகளின் விலைகள் 50 வீதம் குறைந்துள்ளது; விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் கூறுகிறார்!

மரக்கறிகளின் விலைகள் 50 வீதம் குறைந்துள்ளது; விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் கூறுகிறார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு