Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுற்றுலா செல்வோரை பீதியடைய வைத்துள்ள நாடு!

சுற்றுலா செல்வோரை பீதியடைய வைத்துள்ள நாடு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.

இவ்வாறு, அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில், அண்மைக்காலமாக கொலம்பியாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தான நிலை உருவானதாலேயே சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலம்பியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள், பணத்திற்காகவும், உடமைகளுக்காகவும் கொல்லப்படுவது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு (2023) 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டுடன் (2022) ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் “ஸ்கொபோலமைன்” (scopolamine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலை செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

இதனால், அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
Next Post
கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ்; உலக நாடுகளை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்!

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ்; உலக நாடுகளை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு