மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குற்பட்ட ஐஸ் கிறீம் கடையொன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளை திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கட்சியொன்றின் காரியாலய காவலாளி ஒருவரே இதனை செய்துள்ளார். சம்பவ தினமான நேற்று(16.04.2023) காலை கடையின் உரிமையாளர் கடைக்கு முன்பாக சைக்கிளை வைத்து கதவை பூட்டி விட்டு சென்று மாலை வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு போயுள்ளது.
இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராவை சோதனையிட்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து காரியாலய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட சைக்கிளையும் மீட்டுள்ளனர். வீதியால் சென்ற ஒருவரை நிறுத்தி எனது சைக்கிள் கடைக்கு முன்பாக உள்ளது, முதலாளி கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார் அதனை எடுத்து தாருங்கள் என கோரியுள்ளார். குறித்த வழிப்போக்கரும் கம்பி இடைவெளியால் சென்று சைக்கிளை எடுத்து காவலாளியிடம் கொடுத்துள்ளார். அந்த சைக்கிளை காவலாளி கட்சி காரியாலயத்தில் மறைத்து வைத்து விட்டு திருடிய நேரத்தில் தான் அணிந்திருந்த ஆடையையும் மாற்றி வேறொரு ஆடையை அணிந்து காரியாலயத்தில் இருந்துள்ளார். என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.