இந்த நாட்டில் பலம் பொருந்திய அரசியல் மாற்றம் ஒன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“..இந்த நாட்டில் பலம் மிக்க அரசியல் மாற்றம் ஒன்று உருவாக அனைத்தும் தயாராக உள்ளது. நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர். தரத்துடன் கூடிய பாரியளவிலான பல கோணங்களுடன் ஒரு அரசியல் கூட்டணி பாராளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க உள்ளோம்.. அதே போன்று சிறந்த தேர்ச்சியான வேட்பாளர் குழுவினை பொதுத் தேர்தலிலும் களமிறக்குவோம்…” என்றார்.