இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி 3மணிக்கு நடைபெறவுள்ள சுதந்திர தின விழா தொடர்பான முன்னோட்ட கூட்டம் ஆளுநர் சுற்றுலா விடுதியில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டது.
அதேசமயம் இந்த கலந்துரையாடலில் வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.