தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கொத்மலை ஓயாவில் வாழும் மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கு இரசாயனப் பொருள் கலந்தமையே காரணமாகுமென நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நிஷங்க விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேல் கொத்மலைநீர்த்தேக்கத்துக்கு அம்பேவெலபிரதேசத்தில் இருந்து மெரயா, எல்ஜின், அக்கரகந்த, லிந்துல, தலவாக்கலை, கொத்மலைஓயா வரை சுமார் 40 கிலோ மீற்றர் நீர் வருகின்றது. அம்பேவெலயிலிருந்து லிந்துல, அக்கரகந்த வரையான சுமார் 12 கிலோ மீற்றர் வரையான அந்த ஓயாவிலும் ஞாயிற்றுக்கிழமை (16) முதல் ஆயிரக்கணக்கான மீன்களஉயிரிழந்து மிதந்தன.
இறந்த மீன்களின் உடல் பாகங்கள் மற்றும் கொத்மலை ஓயாவின் நீர் மாதிரிகள் பேராதனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த நீரில், இரசாயனப் பொருள் கலந்திருந்தமைகண்டறியப்பட்டது. இந்நிலையில், ஆற்று நீரானது கறுப்பு நிறத்தில்காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கரைஒதுங்கியமீன்களை அப்பகுதி மக்கள் சிலர் சமையலுக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதேநேரத்தில்அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் பகுதியில் இயங்கிவரும் தேயிலை தொழிற்சாலையின் கழிவானது குறித்த ஆற்றுநீரில்கலந்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆக்ரஒயாஆற்றில் ஓடும் நீரினைஅக்கரகந்த தொடக்கம் தலவாக்கலை வரை ஆற்று ஓரத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பாவனைக்கு எடுத்து கொள்வதாகவும், ஆற்றுநீர் மாசடைந்துள்ள நிலையில் விவசாயத்திற்கு இதனால் பாதிப்புகள்ஏதும் ஏற்படுமா என்றஅச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து சுகாதாரப்பிரிவு அதிகாரிகள்மற்றும் சுற்றாடல் பிரிவினர் தலையிட்டு உடனடியாக தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.