Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் கட்சி தலைவர் கொலையை வழிநடத்திய இராணுவ மேஜர்; விசாரணைகளில் வெளிவரும் தகவல்கள்!

அரசியல் கட்சி தலைவர் கொலையை வழிநடத்திய இராணுவ மேஜர்; விசாரணைகளில் வெளிவரும் தகவல்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் லயன் ரெஜிமண்ட் படைப்பிரிவில் கடமைப்புரிந்த இராணுவ மேஜர் நிஷாந்த டயஸ் என்பவரே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை முழுமையாக வழிநடத்தியுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் இராணுவத்தில் தொடர்ச்சியான முறைகேடுகளில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு தகவல்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை வீரர், சம்பவம் இடம்பெற்று 7 நாட்களுக்குப் பிறகு டுபாய் நோக்கி சென்றுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் துப்பாக்கிதாரியின் மனைவி வெயங்கொடை – பல்லேவெல பகுதியில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக டிஃபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் ஜீப் ரக வாகனத்தில பிரவேசித்தவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பல திணைக்களங்களில் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காணொளி காட்சிகள் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா பாணியில் சம்பவம்- ஆயுத குழுக்களினால் டிபென்டர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்; 5 பேர் பலி!

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
Next Post
இலங்கை உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு 55 வயது வரை கொடுப்பனவு!

இலங்கை உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு 55 வயது வரை கொடுப்பனவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு