மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு வாவிக்குள் குதித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் இன்று (15) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கல்லடி பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் வாவிக்குள் குதித்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.








