மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி அனோஜா ஜனார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி, அவர் நாளை (16.09.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் போட்டிப் பரீட்சையின் ஊடாக இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்த திருமதி அனோஜா ஜனார்த்தன், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் திட்டமிடலுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தின் மூலம் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.








